சிங்கப்பூரைச் சுற்றி 200 ஆண்டுகளாகக் காணப்பட்ட உயிரினங்களின் உருவமாதிரி – உலகிற்கு தெரியப்படுத்த டிஜிட்டல் வடிவமாக்கும் திட்டம்

natural specimen singapore london museum digital
சிங்கப்பூரைச் சுற்றிலும் சுமார் 200 ஆண்டுகளாகக் காணப்பட்ட இயற்கை உயிரினங்களில் மிக முக்கியமானவற்றின் உருவ மாதிரிகளை டிஜிட்டல் வடிவத்தில் பாதுகாப்பதற்கான ஐந்தாண்டுத் திட்டம் லண்டன் மற்றும் சிங்கப்பூரில் அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 9,2022 அன்று தொடங்கப்பட்டுள்ளது.
அரியவகை இயற்கை உயிரினங்களின் மாதிரிகளை விஞ்ஞானிகள் பட்டியலிடுவர்.

 

பட்டியலை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் விஞ்ஞானிகளும்.லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் விஞ்ஞானிகளும் வழங்குவர்.
சான்றாக,சிங்கப்பூரில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட பாம்பிற்கு அறிவியல் பெயர் சூட்டியது தொடர்பிலான விவரங்களை விஞ்ஞானிகள் ஆவணப்படுத்துவர்.
சிங்கப்பூர் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு கண்டறியப்பட்ட பெரும்பாலான உயிரினங்களின் உருவமாதிரிகள் பிரிட்டனில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரு நாட்டின் அரிய வகை மற்றும் பல்லுயிர்த் தரவுகளை இணையம் வாயிலாக உலகிற்கு அளிக்கும் முயற்சியாக இந்தத்திட்டம் விளங்கும்.