அடுத்த 24 மணி நேரத்தில் சிங்கப்பூர் காற்று ‘ஆரோக்கியமற்ற’ தரத்துக்கு மாறும் – என்இஏ ரிப்போர்ட்

nea reports on Singapore's air quality
nea reports on Singapore's air quality

சிங்கப்பூரில் காற்றின் தரம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆரோக்கியமற்ற வரம்பிற்குள் நுழையக்கூடும்” என்று தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (என்இஏ) வியாழக்கிழமை (செப் 12) தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் காட்டுத் தீயால் ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக சிங்கப்பூர் காற்றின் தரம் இப்படியொரு மோசமான நிலைக்குச் செல்கிறது.

வியாழக்கிழமை சிங்கப்பூரில் சற்று மந்தமாக இருந்த காற்றின் தரம், அடுத்த 24 நேரத்தில், Pollutant Standard Index(PSI) அளவின் படி, இரவு 7 மணியளவில் 75 முதல் 87 வரை வீழ்ச்சியடைந்தது.

“மத்திய மற்றும் தெற்கு சுமத்ராவில் உள்ள வெப்பப்பகுதிகளில் இருந்து வரும் புகைமூட்டத்தால் நிலவும் காற்று வீசுவதால் இந்த மந்தநிலை ஏற்படுகிறது,” என்று என்இஏ கூறியுள்ளது.

புகைமூட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பின் அளவை, காற்று மாசுபாடு குறியீட்டைக் (Air Pollution Index -API) கொண்டு கணக்கிடுகிறார்கள்.

பொதுவாகக் காற்று மாசுபாடு குறியீடானது (API), ஒன்று முதல் ஐம்பது புள்ளிகள் வரை இருப்பின் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது எனக் கருதப்படுகிறது. ஐம்பது முதல் நூறு புள்ளிகள் வரை இருப்பின் அது மிதமான பாதிப்பாகவும், 150 முதல் 200 புள்ளிகள் வரை இருப்பின் அது உடல்நலத்தைப் பாதிக்கும் என்றும், 200 புள்ளிகளைக் கடந்துவிட்டால் அது மிக ஆபத்தானது என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.

300 புள்ளிகள் என்பது உயிருக்கே உலை வைத்துவிடக் கூடிய அளவு.

குறிப்பாக நுரையீரல் மற்றும் இதயப் பிரச்சினை உள்ளவர்கள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.