பக்கத்து வீட்டுப் பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற வக்கீல்! – பெண் அலறியதால் கையும் களவுமாகச் சிக்கினார்

(PHOTO: Facebook)
2020-ஆம் ஆண்டில் வழக்கறிஞரான நிக்கலஸ் இயோ பக்கத்து வீட்டுப் பெண் குளிப்பதை அவருக்குத் தெரியாமல் அந்த வீட்டின் மாடி முகப்பு வழியாக வீடியோ எடுத்துள்ளார்.அவர் 2 முறை இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
இயோவின் பக்கத்து வீட்டுப் பெண் 20 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்.அவருக்கு 12 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.பெண் குளிப்பதைப் பார்த்ததாகவும் அதை வீடியோ எடுத்ததாகவும் நீதிமன்றத்தில் அவர் ஒப்புக் கொண்டார்.

2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை அமல்படுத்தப்பட்ட பெருந்தொற்று கட்டுப்பாடுகளால் வேலை தொடர்பாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அதிலிருந்து விடுபட இக்குற்றத்தை செய்ததாகவும் நீதிமன்றத்தில் கூறினார்.
2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அந்தப் பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற போது அந்தப் பெண் அலறியதால்  இயோ கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்