நேபாள விமான விபத்து- கருப்புப் பெட்டி சிங்கப்பூருக்கு வருகிறது!

Twitter Image

கடந்த ஜனவரி 15- ஆம் தேதி அன்று நேபாள நாட்டில் போக்காரா சர்வதேச விமான நிலையத்துக்கு (Pokhara International Airport- ‘PIA’) பயணிகள், விமான ஊழியர்கள் என 72 பேருடன் சென்றுக் கொண்டிருந்த யெட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு (Yeti Airlines) சொந்தமான ATR 72 ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாகவும், 68 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பேரிடர் மேலாண்மைத் துறைத் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 15 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்கறிகளால் மிகப்பெரிய ரங்கோலியைச் செய்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!

இந்த விபத்து தொடர்பாக, நேபாள அரசு விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது. இந்த நிலையில், விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. இந்த கருப்புப் பெட்டியில் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு பயணிகள் மற்றும் விமானிகள் பேசிய உரையாடல்கள் இதில் பதிவாகியிருக்கும். எனவே, அந்த கருப்பு பெட்டியில் உள்ள தகவல்களை மீட்பதற்காக, சிங்கப்பூரை நாடியுள்ளன நேபாள அதிகாரிகள்.

சிங்கப்பூரில் இந்திய தூதரகம் கொண்டாடிய குடியரசுத் தின விழாவில் சிங்கப்பூர் அமைச்சர் பங்கேற்பு!

இதையடுத்து, கருப்பு பெட்டியை நேபாள அதிகாரிகள் சிங்கப்பூருக்கு கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து, விமானத் தரவு ரெக்கார்டர் (flight data recorder) மற்றும் காக்பிட் குரல் ரெக்கார்டர் (cockpit voice recorder) ஆகிய இரண்டும் சிங்கப்பூரின் போக்குவரத்து பாதுகாப்பு புலனாய்வுப் பணியகத்தின் நிபுணர்களால் (Singapore’s Transportation Safety Investigation Bureau) ஆய்வு செய்யப்படும். அதன் பின்னர், நேபாள அரசுக்கு அறிக்கையாக, அவை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.