ஓட்டுநர் கண்ணாடி வழி முன் அங்கத்தை பார்த்ததாக வீடியோ வெளியிட்ட பெண் பயணி – பெண்ணை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

டாக்ஸியில் பயணம் செய்த பெண்ணின் மார்பகங்களை கண்ணாடி மூலம் ஓட்டுநர் பார்த்ததாக, அவரை வசைபாடும் வீடியோ ஒன்று வைரல் ஆனது.

ஆனால், நெட்டிசன்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து, அந்த பெண்ணுக்கு எதிராக தங்கள் கருத்துக்களை திருப்பியுள்ளனர். இதன் வீடியோவை SG Road Vigilante ஆன்லைனில் பகிர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் அதிகரிக்கும் தொற்று: புதிதாக 956 பேர் பாதிப்பு – 692 பேருக்கு Omicron

“பின் இருக்கையில் இருந்து உங்களால் உங்கள் மார்பகங்களைப் பார்க்க முடிந்தால், அவற்றை ஓட்டுநரால் பார்க்க முடியாது” என்று ஒருவர் நெத்தி அடியாக பதில் கூறியிருந்தார்.

மற்றொருவர், “இயற்பியல் கூட தெரியாத ஒரு பெண்ணால் ஏழை டாக்ஸி ஓட்டுநர் கொடுமைப்படுத்தப்பட்டார்” என்றும் கருத்து தெரிவித்தார்.

மேலும் ஒருவர், “இப்போது இந்த வீடியோவைப் பார்க்கும் அனைவரும் உங்கள் மார்பையும் பார்க்கிறார்கள். LOL” என்று நகைச்சுவையாக பதில் கூறியிருந்தார்.

“கண்ணாடி மார்பகத்தை காட்டுகிறது என்று என்னும் நேரத்தில், அது உங்களுக்கு சங்கடமாக இருந்தால் இதற்கு ஒரு எளிய தீர்வு உள்ளது, நீங்கள் பின் இருக்கையின் இன்னொரு பக்கத்திற்கு மாறி அமரலாம்..” என்றும் பலர் தங்களின் கருத்துக்களை அந்த பெண்ணுக்கு எதிராக கூறி வருகின்றனர்.

நடைபாதை கூரையின் மீது விழுந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணம்