புதிய பேருந்து நிறுத்தங்கள் தொடர்பான எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனத்தின் அறிவிப்பு!

Photo: SBS Transit Ltd

எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனம் (SBS Transit Ltd) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் டிசம்பர் 12- ஆம் தேதி முதல் இரண்டு புதிய பேருந்து நிறுத்தங்கள் (New Bus Stops) பயன்பாட்டிற்கு வருகிறது. பெடோக் நார்த் ஸ்ட்ரீட்- 1 (Bedok North Street 1) சாலையின் எதிர் எதிரே இரண்டு புதிய பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. Aft Heartbeat@bedok என்ற பேருந்து நிறுத்தமும் (பேருந்து நிறுத்த குறியீடு- 84651), BefHeartbeat@bedok என்ற பேருந்து நிறுத்தமும் (பேருந்து நிறுத்த குறியீடு- 84659) புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

‘VTL’ சிறப்பு பயணத் திட்டம் மேலும் ஆறு நாடுகளுக்கு விரிவாக்கம்!

இவ்வழித்தடத்தில் 14, 18, 69, 155, 168, 222, 225G/W மற்றும் 228 ஆகிய எண்களைக் கொண்ட பேருந்து சேவையை வழங்க உள்ளன. இந்த இரண்டு புதிய பேருந்து நிறுத்தங்களிலும், இந்த பேருந்துகள் நின்று செல்லும். பெடோக் பகுதிகளில் (Bedok Residents) வசிக்கும் மக்களுக்கு இப்பேருந்து சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மலேசியா, சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு மீண்டும் நேரடி விமான சேவை தொடங்க வேண்டும்”- இந்திய அமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம்!

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 1800-287-2727 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் (அல்லது) www.sbstransit.com.sg என்ற இணையதளத்தை அணுகலாம்”. இவ்வாறு எஸ்பிஎஸ் டிரான்ஸிட் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.