அடுத்த ஆண்டு சிங்கப்பூர் விமானக் கண்காட்சியில் புதிய மாற்றம்!

Photo: defense-update

சிங்கப்பூரில் வழக்கமாக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விமானக் கண்காட்சி, வருகின்ற 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பலவித புதிய மாற்றங்களுடன் நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள சாங்கி கண்காட்சி மையத்தில் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இந்த விமானக் கண்காட்சி நடக்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த வகையான கோவிட்-19 நோயாளிகளுக்கு கட்டணம் S$25,000 – MOH

பல நாட்களுக்கு பிறகு நடைபெறுவதால் 10000க்கும் மேற்பட்டோர்கள் வருகை தந்து கண்காட்சியை கண்டுகளிப்பர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கோவிட்-19 கிருமித் தொற்று சூழ்நிலைக்கு முன்பு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விமானப் படைகளின் வான்வெளி சாகசங்கள் அரங்கேற்றப்படும். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடரந்து நடைபெறும்.

இக்கண்காட்சியை கண்டுகளிக்க, கண்காட்சி இறுதி நாட்களில் பொதுமக்கள் வருவதற்கு அனுமதிக்கப்படுவர். ஆனால் தற்போது கோவிட்-19 தொற்று பரவும் அபாயத்தைக் குறைப்பதற்காக, பொதுமக்களுக்கென்று தனியாக நாட்கள் ஏதும் ஒதுக்கப்படவில்லை.

மேலும் கோவிட்-19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சியில் கோவிட்-19 கட்டுப்பாடுகளை மீறி நடந்த சம்பவம்!