செங்காங்கில் புதிய Anchorvale Village Hawker Centre – அடுத்த ஆண்டு திறக்கப்படும் என எதிர்பார்ப்பு

new-hawker-centre-in-sengkang-2024

செங்காங்கில் புதிய Anchorvale Village Hawker Centre உணவகம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது அடுத்த 2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் உணவகம் திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர் அழுது புலம்பும் காட்சி – “சிங்கப்பூரர் / PR இல்லாமல் எப்படி வேலை செய்யலாம்”.. பிடித்து மிரட்டிய ஆடவர்

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, செங்காங் ஸ்போர்ட்ஸ் சென்டர் மற்றும் பார்ம்வே எல்ஆர்டி நிலையத்திற்கு அருகில் 339 ஆங்கர்வேல் சாலையில் உணவகம் அமைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

இந்த 2023 ஆம் ஆண்டில் புதிதாக இரண்டு Hawker உணவக நிலையங்கள் சிங்கப்பூரில் உருவாகும் என்று கடந்த மார்ச் 2 ஆம் தேதி, நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கான மூத்த அமைச்சர் எமி கோர் கூறினார்.

அதில், புவாங்காக் பகுதியில் உருவாகும் முதல் உணவகம் 38 ஸ்டால்கள் மற்றும் 721 இருக்கைகளை கொண்டிருக்கும்.

மேலும், உட்லே வில்லேஜில் உருவாகும் இரண்டாவது உணவகம் 39 ஸ்டால்கள் மற்றும் 725 இருக்கைகளை கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.