“கூடுதல் மேம்பாட்டு நடவடிக்கை மன நிம்மதியை தருகிறது” – இந்தியாவில் உள்ள குடும்பத்தை பிரிந்து வாடும் பணிப்பெண்

Pic: File/Today

வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் சமூகத்திற்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், திறன் பயிற்சி மற்றும் ஆலோசனை போன்ற பிற நடவடிக்கையில் உதவுவதற்காக ADEO எனும் கூடுதல் நடவடிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 12) தொடங்கப்பட்டது.

ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ் (HIA) மூலம் தொடங்கப்பட்ட ADEO, பணிப்பெண்களுக்கு உடல்நலம் மற்றும் மனநலப் பேச்சுக்கள் மற்றும் ஆங்கில மொழி வகுப்புகளையும் ஏற்பாடு செய்யும்.

32 நாடுகளுடனான சர்வதேச விமான சேவை தொடரும் – இந்தியா

சிங்கப்பூர் கருணை இயக்கம், சிங்கப்பூர் சர்வதேச வர்த்தகச் சங்கம் உட்பட 100க்கும் மேற்பட்ட அமைப்புகளால் ADEO ஆதரிக்கப்படுகிறது.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மனிதவள அமைச்சர் கன் சியோவ் ஹுவாங், வீட்டுப் பணிப்பெண்கள் பெறக்கூடிய கூடுதல் நடவடிக்கைளை அறிந்து மனமகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டார்.

“பல ஆண்டுகளாக வீட்டுப் பணிப்பெண்களின் பாதுகாப்பு மற்றும் சிறந்த வாழ்க்கையை வலுப்படுத்த மனிதவள அமைச்சகம் நடவடிக்கைகளையும் கொள்கைகளையும் வகுத்து வருகிறது” என்றார்.

“ஆனால், அரசாங்கம் மட்டும் இத்தகைய கவனிப்பை வழங்குவது உண்மையில் கடினம்,” என்று அவர் கூறினார்.

வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்ணான திருமதி மீனா குமாரி, இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தை பிரிந்து வாடும் வேளையில், சிங்கப்பூரில் இந்த புதிய முயற்சி கொஞ்சம் மன நிம்மதியை அவருக்கு தருவதாக கூறுகிறார்.

அவர் மன அழுத்தத்தை போக்க, K-pop நடனம் மற்றும் யோகா வகுப்புகள், திரைப்படத் திரையிடல்கள் போன்ற செயல்பாடுகளை முயற்சிக்க ஆவலுடன் அவர் காத்திருப்பதாக கூறினார்.

சிங்கப்பூரில் வெளிநாட்டை சேர்ந்த ஆடவர் மீது குற்றச்சாட்டு