இதுதான் திடீர் கண்டுபிடிப்பு! – கழிவுநீரிலிருந்து இதை நீக்கினால்தான் அவைகள் உயிர்வாழ முடியும்

Photo: Nanyang Technological University Official Facebook Page

சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சுற்றுப்புற உயிர் அறிவியல் பொறியியல் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கழிவுநீரிலிருந்து பாஸ்பரஸ் என்னும் எரிமத்தை அகற்றும் புதிய வழிமுறையை உருவாக்கியுள்ளனர்.நுன்கிருமிகளைப் பயன்படுத்தி பாஸ்பரசை நீக்க முடியும் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.இது மிகுந்த பயனளிக்ககூடியது.

சிங்கப்பூர் போன்ற வெப்பமண்டல நாடுகளில் உள்ள நீர்நிலைகளில் பாசி அதிகம் படரக் கூடும்.பாஸ்பரஸ் கனிமத்தால் பாசி திடீரென வேகமாக படர்வதை இந்த வழிமுறையின் மூலமாகத் தடுக்க முடியும்.அதிகளவிலான நச்சை பாசி வெளியேற்றுவதால் நீர்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கின்றன.மேலும் பாசி படர்வதால் நீரிலுள்ள உயிர்வாயு குறைந்து சுவாசப் பற்றாக்குறையை உருவாக்கும் அபாயம் உள்ளது.

எனவே,தண்ணீரிலிருந்து பாஸ்பரஸ் தாதுவை நீக்குவது அவசியமாகும்.சிங்கப்பூரிலுள்ள கழிவுநீரிலிருந்து பாஸ்பரஸ் அகற்றப்படுவதில்லை என்று அறிவதாக பிரபல ஊடகம் தெரிவித்துள்ளது.சிங்கப்பூரின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரிலுள்ள பாஸ்பரஸ் தாதுவினால் குடிநீருக்கோ அல்லது இங்குள்ள கடல்நீருக்கோ எந்தவித பாதிப்பும் கிடையாது.

பாஸ்பரஸ் தனியாகப் பிரித்து நீக்குவது எவ்வாறு என்று விடையறியாமலிருந்த விஞ்ஞானிகளுக்கு பொதுப் பயனீட்டுக் கழகம் மிகப்பெரிய துப்பினை தெரிவித்தது.அதாவது தனது சுத்திகரிப்பு ஆலைகளில் தற்செயலாக பாஸ்பரஸ் அகற்றப்படுவதைக் கவனித்ததாக கூறிய கழகம் விஞ்ஞானிகளுடன் பணியாற்றியது.பாஸ்பரஸை நீக்கும் நுண்கிருமிகள் எவை என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.