சிங்கப்பூர் நிதித்துறையில் 9400 புதிய வேலைவாய்ப்புகள் – நான்கு மடங்கு வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளதாக MAS தலைவர் ரவி மேனன் பேச்சு

சிங்கப்பூர் பட்ஜெட்
Singapore Jobs

Covid-19 சுகாதார கட்டுப்பாடுகள் 2 ஆண்டுகளுக்கு பின்பு நீக்கப்படுவதை தொடர்ந்து சிங்கப்பூரின் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சிங்கப்பூர் விமான போக்குவரத்து துறையை அடுத்து தற்பொழுது நிதித்துறையில் 9400-க்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதாக (MAS) சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்தது.

இவற்றில் அதிக அளவில் பொறியாளர்கள் தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. 700 காலி பணியிடங்களுக்கு மென்பொருள் மேம்பாட்டாளர்களும் ,தொழில்நுட்ப பணியிடங்களுக்கு 3000 ஊழியர்களும் தேவைப்படுவதாக MAS தலைவர் ரவி மேனன் (May 19) வியாழக்கிழமையன்று தெரிவித்தார் சிங்கப்பூர் நிதி மன்றத் தொடக்க விழாவில் ரவி மேனன் பங்கேற்றார்.

வியாழனன்று நடைபெற்ற தொடக்க விழாவில் பேசிய ரவி மேனன் சிங்கப்பூர் நிதி மையம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், எதிர்காலத்திற்கான திட்டங்கள் பிரகாசமாக இருக்கும் என்றும் கூறினார்.Covid-19 தொற்று நோயின் போது நிதித்துறையில் வளர்ச்சியானது ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட நான்கு மடங்கு வேகமாக இருந்ததாகவும் மேனன் கூறினார்.

தொற்றுநோய் நிதித் துறையின் வளர்ச்சியை தடுக்கவில்லை என்று குறிப்பிட்டார். நிதித் துறையில் புதிதாக பணியமர்த்தப்பட இருப்பவர்கள் பிளாக்செயின், தொழில்நுட்பம் ,டிஜிட்டல் கரன்சி மற்றும் மோசடி ஆகியவற்றை கண்டறியும் (AI- Artificial intelligence ) செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதை ஆராய்ச்சி செய்வார்கள் என்று தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நிதித்துறையில் 5800 வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன .சிங்கப்பூர் தற்போது 1400 நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட உலகளாவிய கண்டுபிடிப்பு ஆய்வகங்களுக்கு தாயகமாக உள்ளது என்று மேனன் கூறினார்.