புதிய எம்ஆர்டி ரயில்கள் அறிமுகம்!

Photo: Facebook/Land Transport Authority

சிங்கப்பூரில் 1987- ஆம் ஆண்டில் இருந்து பயன்பாட்டில் இருக்கும் பழைய ரயில்களை மாற்ற முடிவு செய்துள்ளது சிங்கப்பூரின் நிலப்போக்குவரத்து ஆணையம். அதன்படி, சிங்கப்பூரில் பெரும்பாலான ரயில் பாதைகளில் 106 புதிய ரயில்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூருக்கு வருகிறார் வியட்நாம் அதிபர்!

அதன் ஒரு பகுதியாக, சீனாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு புதிய ரயில்கள் கப்பல் மூலம் சிங்கப்பூர் ஜூரோங் துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது. இந்த புதிய ரயில்கள் ஜெர்மனி நாட்டில் வடிவமைக்கப்பட்டது; ரயில் தயாரிக்கத் தேவையான பாகங்கள் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டதாக நிலப்போக்குவரத்து ஆணையம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்த புதிய ரயில்கள் சிங்கப்பூரின் வடக்கு- தெற்கு, கிழக்கு- மேற்கு எம்ஆர்டி ரயில் பாதைகளில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் சேவைக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து, நடப்பாண்டு இறுதியில் புதிய ரயில்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று நிலப்போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது.

நார்வே வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்த சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

மேலும், வடக்கு- தெற்கு, கிழக்கு- மேற்கு எம்ஆர்டி ரயில் பாதைகளில் தற்போது இயங்கி வரும் ரயில்கள் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து படிப்படியாக நீக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ரயில்கள் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.