சீனாவில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ் – அச்சம் தவிர்த்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் அறிவுரை

COVID-19 recovered cases in Singapore
new virus in china singapore scientist warn
சீனாவில் புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட கிருமியால் உலகம் முழுவதும் கவலை ஏற்பட்டுள்ளது.விலங்குகளிடமிருந்து பரவுவதாக நம்பப்படும் இந்தக் கிருமி இது வரை 35 பேரை பாதித்துள்ளது.ஆனால் லாங்யா கிருமி குறித்து அச்சமடைய தேவையில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சிங்கப்பூர்,சீனா,ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய கிருமி பற்றி ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.

லேவி என்று சுருக்கமாக குறிப்பிடப்படும் புதிய கிருமி 2018-ஆம் ஆண்டின் இறுதியில் முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.ஆனால், ஆராய்ச்சியாளர்கள் கடந்த வாரம்தான் அதனை அடையாளம் கண்டுள்ளதாக பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.தொண்டையில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆராய்ச்சி செய்ததில் இந்த கிருமி பற்றி தெரிய வந்துள்ளது.

இந்தக் கிருமி இதற்கு முன்பு மனிதர்களைப் பாதித்ததாகத் தெரியவில்லை.
தற்போது பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள்.முன்பு அடையாளம் காணப்பட்ட நிபா,ஹென்ட்ரா ஆகிய கிருமிகள் இதே குடும்பத்தைச் சேர்ந்தவை.இரண்டு வைரஸ்களும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும்.இதற்கு சிகிச்சையோ தடுப்பூசியோ இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

இதுவரை இந்த நவீன கிருமியால் யாரும் உயிரிழக்கவில்லை என்பதால் அச்சமடையத் தேவையில்லை என சிங்கப்பூரின் டியூக்-என்யூஎஸ் மருத்துவ கழகத்தின் பேராசிரியர் வாங் தெரிவித்தார்.