சிங்கப்பூரில் இந்த ஆண்டும் மெரினா பே வட்டாரத்தில் “புத்தாண்டு வாணவேடிக்கை” இல்லை

Fireworks New Year Marina Bay

கூட்டம் சேர்வதை குறைக்கவும், கோவிட்-19 பரவுவதைத் தடுக்கவும் மெரினா பே வட்டாரத்தில் இந்த ஆண்டு புத்தாண்டு கவுண்டவுன் கொண்டாட்டத்தில் வாணவேடிக்கை இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக, பொதுமக்கள் வீட்டிலேயே தங்கி, பல்வேறு முக்கிய பகுதிகளில் வெடிக்கப்படும் வாணவேடிக்கைகளை பார்த்து மகிழலாம்.

மரத்தூளுக்குள் தங்கம்…சென்னை விமான நிலையத்தில் சிக்கிய பயணிகள்- அதன் மதிப்பு ரூ.49 லட்சமாம்!

முக்கிய பகுதிகளில் வாணவேடிக்கை பற்றிய கூடுதல் தகவல்கள் சரியான நேரத்தில் வழங்கப்படும் என்று URA ஆணையம் தெரிவித்துள்ளது.

2005ஆம் ஆண்டு முதல் வாணவேடிக்கை நிகழ்வு தொடங்கியதில் இருந்து, இரண்டாவது தடவையாக  வாணவேடிக்கை இல்லாமல் கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

முக்கிய பகுதிகளில் நடக்கும் வானவேடிக்கைகள் மற்றும் காட்சிகளை பொதுமக்கள் தொலைக்காட்சி அல்லது ஆன்லைனில் பார்த்து மகிழலாம் என்று URA செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை (டிசம்பர் 20) தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார்.

கடந்த ஆண்டை போல இந்தாண்டும் மரினா பே பகுதியில் இரவுதோறும் ஒளிக்காட்சிகள் இடம்பெறும். அதில் “மரினா பே சிங்கப்பூர் கவுண்ட்டவுன் 2022”-இன் சிறப்பம்சங்களை பொதுமக்கள் கண்டு மகிழலாம்.

இந்திய விமான சேவை எப்போது தொடங்கும் ? – இந்திய அரசு விளக்கம்