எல்லைகளைத் திறப்பதாக நியூசிலாந்து அரசு அறிவிப்பு!

Changi Airport stole Woman arrested
Pic: TODAY

நியூசிலாந்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “விசாவுக்கு விலக்கு பெறப்பட்ட நாடுகளில் (Visa Waiver Countries) இருந்து நியூசிலாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்கு வரும் மே மாதம் 1- ஆம் தேதி அன்று நள்ளிரவு 11.59 PM மணிக்கு (உள்ளூர் நேரம்) நியூசிலாந்து தனது எல்லைகளைத் திறக்க உள்ளது. சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலா பயணிகள் நியூசிலாந்துக்கு வரலாம். அவர்கள் நியூசிலாந்து வந்தவுடன் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.

மார்ச் 17- ஆம் தேதி அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பௌர்ணமி பூஜை!

புறப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட்டின் (Antigen Rapid Tests- ‘ART’) ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் ஆகும். அதைத் தொடர்ந்து, நியூசிலாந்தில் இருக்கும் போது, ஐந்தாவது நாளில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, முடிவைத் தெரிவிக்க வேண்டும். வரும் ஏப்ரல் மாதம் 13- ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியா நாட்டு பயணிகளுக்காக எல்லைகள் திறக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் (New Zealand Prime Minister Jacinda Ardern) இன்று (16/03/2022) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “நாடு வழிகாட்டுதலைப் பெற்றுள்ளது. உலகை மீண்டும் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நியூசிலாந்தில் சுற்றுலா பயணிகள் இருக்கும் போது, எடுக்கப்படும் கொரோனா பரிசோதனையில், கொரோனா உறுதிச் செய்யப்பட்டால், அவர்கள் ஒரு வாரம் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தங்க நகைகள், பணத்தைத் திருடிய இந்தோனேசிய பணிப்பெண்ணுக்கு சிறைத் தண்டனை!

நியூசிலாந்து அரசின் அறிவிப்பால் சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதாலும், கோடைக்காலம் தொடங்க உள்ளதாலும், சுற்றுலா துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில், இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.