“உன் அம்மா போய்விட்டாள்” மகனுக்கு தொலைபேசியில் கூறிய தந்தை – ஆத்திரத்தில் மனைவியை எப்படி கொன்றிருக்கிறார் பாருங்க!

தனது மனைவியை அடுக்குமாடி விடுதியில் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 51 வயதான சிங்கப்பூர் ஆடவர் ஃபாங் சூங்கிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.ஃபோங் அவரது மனைவி பெக் யிங் லிங்கைக் கொலை செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டை முன்பு மறுத்திருந்தார். ஆகஸ்ட் 1-ஆம் தேதி இந்த கொலை வழக்கு 12 பேர் கொண்ட நடுவர் மன்றத்தால் விசாரிக்கப்பட்டது.நியூகேஸில் கிரவுன் நீதிமன்றத்தில் .ஃபோங் ஆஜர்படுத்தப்பட்டார்.

 

இந்தத் தம்பதியினர் விடுமுறையைக் கொண்டாட பாரிஸ் செல்ல திட்டமிட்டிருந்தனர்.ஆனால் பாரிஸ் செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பெக் கொலை செய்யப்பட்டுள்ளார்.தனது மனைவியை ஆத்திரத்தில் கொன்று பின்பு பல்கலைக்கழகத்தில் படிக்கும் மகனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து “உன் அம்மாவை நான் காயப்படுத்தினேன். அவள் போய்விட்டாள். அவள் இறந்துவிட்டாள்” என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மனைவி தொடர்ந்து நச்சரிப்பதை விரும்பாத ஃபோங் கோபமடைந்து அவளை அடக்க முயன்றுள்ளார்.
தலையணையை பயன்படுத்தி அவரது மனைவியை கொன்றுள்ளார்.அவள் மூச்சுத்திணறி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிழந்து விட்டாள்.ஃபோங்கின் விசாரணை ஒரு வாரத்திற்கு மேல் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டனில் கொலை அல்லது ஆணவக் கொலைக்கு அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டனையாகும்.