நியூசிலாந்தின் நெருங்கிய நண்பர் சிங்கப்பூர் – 3 நாள் சுற்றுப் பயணம் வந்த நியூசிலாந்து பிரதமர் பேச்சு

newzeland pm meets singapore pm Lee at Istana Jacinda

சிங்கப்பூரின் Istana அரண்மனையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது சிங்கப்பூர் பிரதமர் Lee ,நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern ஆகிய இருவரும் உரையாற்றினர். நியூசிலாந்து பிரதமர் 3 நாள் சுற்றுப்பயணமாக திங்கள் கிழமை (April 18) சிங்கப்பூர் வந்தடைந்தார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் லீ , நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஒருங்கிணைந்து பசுமைப் பொருளாதாரம் மற்றும் பருவநிலை நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் நெருக்கமாக செயல்படும் என்று கூறினார்.
“ இங்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மற்றும் இடங்களைப் பாதுகாக்க நாடுகளுக்கு இடையே எங்களுக்கு வலுவான ஒத்துழைப்பு தேவை” என்று பிரதமர் லீ குறிப்பிட்டார்.

2020ஆம் ஆண்டு Covid-19 வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்தபோது தொலைபேசி அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு ,இரண்டு நாடுகளும் ஒருவருக்கொருவர் உணவு பாதுகாப்பை ஆதரிக்கவும் மற்றும் விநியோக சங்கிலி பாதிப்பை தீர்க்கவும் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் லீ-க்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் Jacinda கூறினார்.

சுற்றுப் பயணம் வந்த பிரதமர் Jacinda சிங்கப்பூரை நியூசிலாந்தின் நெருங்கிய நண்பர் என்று குறிப்பிட்டுள்ளார். “கடுமையான காலங்களில் உங்கள் நண்பன் யார் என்பது உங்களுக்குத் தெரியும் என்று கூறுவார்கள். மேலும் சிங்கப்பூர் நியூசிலாந்தின் நெருங்கிய நண்பர் என்பது உறுதியாகிறது ” என்று பிரதமர் Jacinda கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் லீ, இரு நாடுகளுக்கிடையேயான புதிய ஒத்துழைப்பின் மூலம் ,எரிசக்தி மாற்றம், கார்பன் சந்தைகள் ,தொழில்நுட்பம், கழிவு மேலாண்மை மற்றும் நிலையான போக்குவரத்து போன்றவற்றில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று கூறினார்.