“நிலாவே வா ” – நேற்று தோன்றிய சூப்பர் மூனை தவறவிட்டவர்களை அடுத்த மாதம் காண வரும் “Buck moon”

super moon NASA

சிங்கப்பூரில் செவ்வாய் மாலை (ஜூன் 14) “ஸ்ட்ராபெரி சூப்பர் மூன்” காணப்பட்டது, வழக்கத்திற்கு மாறாக பெரிய மற்றும் பிரகாசமான நிலவின் புகைப்படங்களை மக்கள் பகிர்ந்து கொண்டனர்.

 

நேற்றிரவு தோன்றிய சூப்பர் மூனைத் தவறவிட்டவர்கள் கவலைப்பட வேண்டாம். மீண்டும் சூப்பர் மூன் தோன்றும் என்று“ ஏர்த்ஸ்க்கை” தெரிவித்துள்ளது.அடுத்த மாதம் தோன்றும் முழுநிலவு மற்றொரு சூப்பர் மூனாக இருக்கும்.

எதிர்வரும் ஜூலை மாதம் 13-ஆம் தேதி அன்று தோன்றும் முழுநிலவு பெரிதாகவும் மிக பிரகாசமாகவும் இருக்கும். அன்று முழுநிலவு பூமிக்கு மிக அருகில் உள்ள நிலவின் சுற்றுப் பாதையில் இருப்பதால் சூப்பர் மூன் தோன்றுகிறது.

இந்த ஆண்டின் மிகப் பெரிய முழு நிலவு ஜூலை 13 அன்று தோன்றும் என்று கூறப்படுகிறது. நிலா பூமிக்கு மிக அருகில் உள்ள வட்டப்பாதையில் இருக்கும் போது முழுநிலவாக இருப்பதால் இந்த ஆண்டின் மிகவும் தீவிரமான சூப்பர் மூன் இதுவாகும்.

ஜூன் மாதம் தோன்றிய“ ஸ்ட்ராபெர்ரி” மூனை விட ஜூலை மாதம் தோன்றக் கூடிய சூப்பர் மூன் 240 கி.மீ அருகில் இருக்குமாம். மேலும் வழக்கமான முழுநிலவை விட 10 மடங்கு பிரகாசமாக இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான கடைசி சூப்பர் மூன் ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி தோன்றும். ஜூலை மாத சூப்பர் மூன் “பக் மூன்” என்று அழைக்கப்படும். இந்த பெயர் பூர்விக அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்டது என்று NASA தெரிவித்துள்ளது