இலவச பிளாஸ்டிக் பைகளுக்கு குட் பை.. இனி கட்டணம் – ஜூலை 3 முதல் நடப்பு

singapore-supermarkets plastic bags charge

சிங்கப்பூரில் பெரிய பேரங்காடிகளில் ஒவ்வொரு பிளாஸ்டிக் பைக்கும் இன்று (ஜூலை 3) முதல் ஐந்து காசு செலுத்த வேண்டும்.

FairPrice, Cold Storage, Giant, Sheng Siong மற்றும் Prime ஆகியவற்றால் இயக்கப்படும் 400 பேரங்காடிகளில் இது நடப்புக்கு வந்துள்ளது.

வெளிநாட்டு ஊழியரை மகனாக ஏற்றுக்கொண்ட சிங்கப்பூர் பெண்… ஊழியரின் அளவில்லா பாசத்துக்கு கிடைத்த வெற்றி

இந்த கட்டாய உத்தரவு, $100 மில்லியனுக்கும் அதிகமான வருடாந்திர வருவாய் கொண்ட பெரிய பேரங்காடிகளுக்கு மட்டும் பொருந்தும்.

பொது மக்களிடம் இருந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க இது நடைமுறைப்படுத்தப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.

இதனை நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுசூழல் மூத்த துணையமைச்சர் ஏமி கோர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அது சில பிளாஸ்டிக் பைகளுக்கு பொருந்தாது. அதாவது இறைச்சி, காய்கறிகள் அல்லது கடல் சார்ந்த உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் பைகளுக்கு பொருந்தாது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் புதிய வேலை அனுமதி விண்ணப்பங்கள் – செப்டம்பர் 1 முதல் இது கட்டாயம்

பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணம்: சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட்களில் புதிய நடைமுறை