மொத்தமாய் விற்றுத் தீர்ந்த McGriddles – அடுத்து எப்போ வரும்னு காத்திருக்கும் McGriddles பிரியர்கள் !

McGriddles

பல McDonald’s சிங்கப்பூர் விற்பனை நிலையங்களில் விற்றுத் தீர்ந்த McGriddles. எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும் என்பது போல இது எல்லோராலும் நன்கு விரும்பப்படும் McGriddles க்கு அமைந்துள்ளது

GrabFood மற்றும் McDelivery செயலியில் McGriddles மெனுவில் “தற்காலிகமாக இல்லை” எனக் காட்டுகிறது. மேலும் இது பசியுடன் McDonald’s க்குச் சென்ற சில McGriddles  பிரியர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. ஏமாற்றத்துடன் வெளியேறியவர்கள் சுவையான இந்த உணவை மிஸ் பண்றாங்கனு தான் சொல்லனும்.

McGriddles ஏற்கனவே பல விற்பனை நிலையங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டதாக உறுதிப்படுத்திய McDonald’s இன் செய்தித் தொடர்பாளர் McGriddlesக்கு வாடிக்கையாளர்கள் தந்த ஆதரவிற்கு நன்றி என்றும் அவர்கள் இனிமையான மற்றும் சுவையான காலையை அனுபவித்தார்கள் என்று தாங்கள் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

சத்தமின்றி 21 நாட்களுக்கு முன்பு காலை உணவு மெனுவில் மீண்டும் சேர்க்கப்பட்ட McGriddles இப்போது மொத்தமாய் விற்று தீர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.