சிங்கப்பூர் வரும் பயணிகளின் கவனத்திற்கு…இன்று முதல் இதெல்லாம் கட்டாயமில்லை!

increased-screenings-enhancement-measure changi airport
Pic: AFP

சிங்கப்பூரில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள சுற்றுப்பயணிகளுக்கு இன்று (ஏப்ரல் 01) முதல் COVID-19 கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

முழு தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணக் கட்டமைப்பின் கீழ், பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தும் விதிமுறைகள் நெறிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, சிங்கப்பூருக்கு குறுகிய காலகட்டத்தில் வருகை தரும் சுற்றுப்பயணிகளுக்கு பயணக் காப்புறுதி இன்று (ஏப்ரல் 01) முதல் கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி, CPM துறைகள், Work permit, S Pass ஊழியர்களுக்கு ஏப். 1 முதல் இது கட்டாயம்!

சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு COVID-19 தொற்று ஏற்பட்டு சிகிச்சை தேவைப்பட்டால் அதற்கான மருத்துவச் செலவைக் காப்புறுதித் திட்டம் பார்த்துக்கொள்ளும். இதற்காகவே பயணக் காப்புறுதி கட்டாயமாக்கபட்டு இருந்தது தற்போது இது தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமானம், நிலம் மற்றும் கடல் ஆகியவற்றின் வழியே சிங்கப்பூர் வரும் சுற்றுப்பயணிகளுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தும் என சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவாத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருக்குள் நுழைய முழு தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள பெரியவர்களுக்கான அதே விதிமுறைகள், முழு தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 12 அல்லது அதற்கும் குறைவான வயதுடைய சிறுவர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இன்று ஏப். 1 முதல் முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து பயணிகளுக்கும் நுழைவு அனுமதி தேவை இல்லை – Travel update