இலவச விசா ரத்து – இந்தியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு விசா ஆன் அரைவல்: அறிவிப்பு வெளியிட்ட நாடு

no-visa-free spore india indonesia
(Photo: AFP/Roslan Rahman)

இந்தோனேசியா முன்னர் அனுமதித்த 159 நாடுகளுக்கான இலவச விசா கொள்கையை ரத்து செய்துள்ளது.

அதாவது 10 ஆசியான் உறுப்பு நாடுகளைத் தவிர, மற்ற நாடுகளுக்கான இலவச விசாவை அந்நாடு நிறுத்தி வைத்துள்ளது.

ஆண்டின் நடுப்பகுதி, ஊழியர்களுக்கு போனஸ் – சிலருக்கு S$400 வரை கூடுதலாக கிடைக்கும்

திமோர்-லெஸ்டே உள்ளிட்ட ஆசியான் உறுப்பு நாடுகள் மட்டுமே 30 நாள் இலவச விசாவில் பயணத்தை மேற்கொள்ளமுடியும், அதில் குறிப்பாக பயணிகளிடம் முறையான பாஸ்போர்ட் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட புறப்பாடு டிக்கெட் இருக்க வேண்டும்.

92 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் விசா ஆன் அரைவல் என்னும் அந்நாட்டுக்கு சென்று விசா பெறும் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தோனேசியாவிற்கு பயணிக்கும் முன்பாக அவர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

அந்த நாடுகளில் இந்தியாவும் அடங்கும். அதோடு சேர்த்து அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கும் அது பொருந்தும்.

விசா ஆன் அரைவல் திட்டத்தில், சிங்கப்பூரும் தகுதி பெறும். இது மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம், அதேசமயம் விசா இல்லாத நுழைவு சாத்தியமில்லை.

விசா ஆன் அரைவல் விண்ணப்பங்களுக்கான விசா கட்டணம் Rp.500,000 (S$44.69) ஆகும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

ஆண்டிபட்டி to சிங்கப்பூர்… பறித்த 16 மணி நேரத்தில் விற்பனையாகும் வெண்டிக்காய் – அதிக லாபம் ஈட்டும் ஏஜெண்டுகள்