வேலை மாறும் ஒர்க் பெர்மிட் அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு MOM அப்டேட்

Work permit foreign workers Construction company
Pic: Today/File

மலேசியர் அல்லாத ஒர்க் பெர்மிட் அனுமதி வைத்திருக்கும் ஊழியர்கள் வேலை மாறும்போது, தற்போதைய மற்றும் மாறும் நிறுவனங்களின் முதலாளிகள் அவர்களின் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு (SHN) மற்றும் தொடர்புடைய கோவிட்-19 சோதனைகளின் செலவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

SHN உத்தரவு முடிந்த 12 மாதங்களுக்குள் வேலை மாற்றம் நடந்தால், அத்தகைய செலவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) நேற்று (நவம்பர் 12) அறிவித்தது.

எகிறிய விமான முன்பதிவுகள் – வரவிருக்கும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

மற்ற அளவுகோல்கள் என்ன?

SHN மற்றும் கோவிட்-19 சோதனை செலவுகளுக்கு மட்டுமே தற்போதைய முதலாளி செலுத்த வேண்டும். அதை மீறி வேறு எதற்கும் செலுத்த வேண்டியதில்லை.

இரு முதலாளிகளும் எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். அதனை ஒரு வருடத்திற்கு கண்டிப்பாக தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் முதலாளிகள் தங்கள் சொந்த செலவினங்களைத் முடிவு செய்ய முடியும்.

மலேசிய வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் முதலாளிகளின் ஒப்புதலைப் பெறாமல் நிறுவனங்களை மாற்ற முடியும்.

ஆகவே அத்தகைய செலவு-பகிர்வு முதலாளிகளுக்கு பொருந்தாது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த வகையான கோவிட்-19 நோயாளிகளுக்கு கட்டணம் S$25,000 – MOH