சேவைக் கட்டணமின்றி NS55 கிரெடிட்களை மாற்ற வேண்டுமா, அப்படினா இப்படி பண்ணுங்க !

youtrip

NS55 S$100 கிரெடிட்களை YouTrip கார்டில் முழுவதுமாக ஏற்றி மற்ற நாணயங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம். ஷெங் சியோங் ஏடிஎம்களில் NS55 S$100 கிரெடிட்களை பணமாக்குவதற்குப் பதிலாக, YouTrip கார்டுக்கு மாற்றுவதன் மூலம், கிரெடிட்களை பணமாகவே பயன்படுத்துவதற்கான மற்றுமொரு விருப்பமாக இது அமைந்துள்ளது.

YouTrip கார்டு என்பது ப்ரீபெய்டு மாஸ்டர்கார்டு ஆகும், எனவே அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் அதில் கிரெடிட்களை ஏற்ற வேண்டும், உலகளவில் 150க்கும் மேற்பட்ட நாணயங்களில் கூடுதல் கட்டணங்கள் இன்றி, சந்தை மாற்று விகிதம் கொண்டுள்ளது அதன் முக்கிய ஈர்ப்பாகும்

தற்போது, S$100 NS55 கிரெடிட்களை பணமாக்குவதற்கான ஒரு முறை தான், ஷெங் சியோங் ஏடிஎம்களில் இருந்து S$90 பணத்தைப் பெறுவது, இதில் S$0.20 சேவைக் கட்டணமும் LifeSG செயலியில்  மீதமுள்ள S$9.80ஐ பின்னர் பயன்படுத்துமாறும் உள்ளது. இருப்பினும், கிரெடிட்களை விட்டுச் செல்வது உங்கள் காரியம் இல்லை என்றால், சேவைக் கட்டணமின்றி உங்கள் YouTrip கார்டுக்கு முழு S$100 NS55 கிரெடிட்களையும் மாற்றிக்கொள்ளலாம்.

NS55 கிரெடிட்களை YouTrip கார்டுக்கு மாற்றும் முறை:-

  • YouTrip செயலியில்,  சிங்கப்பூர் டாலர்களில் உள்ள உங்கள் இருப்பைச் சரிபார்க்க உள்நுழையவும்.
  • YouTrip செயலியில் PayNow விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
  • டாப்-அப் தொகையாக S$100ஐ உள்ளிடவும்.
  • YouTrip செயலியில் உருவாக்கப்பட்ட QR குறியீட்டை ஸ்கேன் செய்ய உங்கள் LifeSG பயன்பாட்டைத் திறக்கவும்.
  • பரிமாற்றத்தை உறுதிசெய்ய LifeSG செயலியில் ஸ்லைடு செய்யவும்.
  • பரிமாற்றப்பட்ட தொகை YouTrip செயலியில் புதிய இருப்பாக இருப்பதை பார்க்கவும்.
  • LifeSG செயலியில் பரிவர்த்தனை வெற்றிகரமாக உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.