ரயிலில் ஏற்பட்ட பழுதால் 15 நிமிடம் தாமதம் – பயணிகள் அவதி !

nsl train delay

ரயிலில் ஏற்பட்ட கோளாறால் கிராஞ்சி & ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டிக்கு இடையே கூடுதல் பயண நேரம் ஏற்பட்டது. வடக்கு தெற்கு லைனில் ரயில் பழுதால், பயணிகள் குறைந்தது 15 நிமிட கூடுதல் பயண நேரத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கிராஞ்சி மற்றும் ஜூரோங் ஈஸ்ட் MRT நிலையங்களுக்கு இடையே பயணிக்கும் பயணிகளை இந்த ரயில் தாமதம் பாதிக்கிறது என்று SMRT தரப்பில் கூறப்பட்டது.

முதலில் 25 நிமிடங்கள் தாமதமாகும் என்று SMRT தரப்பில் கூறப்பட்டிருந்த நிலையில் ரயில் கோளாறு விரைவில் சரி செய்யப் பட்டதால் 15 நிமிடங்களிலேயே ரயில் வந்தது. ரயில் சேவைகள் படிப்படியாக மீட்டமைக்கப்பட்டு வரும் நிலையில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவும் வண்ணம் இலவச ஷட்டில் பேருந்துகள் (வுட்லாண்ட்ஸ் மற்றும் ஜூரோங் ஈஸ்ட் இடையே )வழங்கப்படுகின்றன என்று SMRT தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 நிமிடம் என்பது நமக்கு சாதாரண ஒன்றாக இருக்கலாம், ஆனால் அவசரத்தில் அலுவலகம் அல்லது வேலைக்கு  செல்வோருக்கு இது சிக்கலாகவே அமைந்திருக்கும். ரயில் பழுது இனி ஏற்படாது என்று நம்புவோம் !