அத்துமீறி இளம்பெண்ணின் தொடையைத் தடவிய விமானப்படை வீரர்! – மானபங்கம் செய்த குற்றத்திற்காக பணியிலிருந்து இடைநீக்கம்!

Pic: File/Try Sutrisno Foo

சிங்கப்பூரில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தங்கும் அறையில் நுழைந்து அங்கிருந்த பெண்ணை மானபங்கம் செய்த குற்றத்திற்காக சிங்கப்பூர்க் குடியரசு விமானப் படையின் லெப்டினன்ட் கர்னல் ஒருவருக்கு $15,000 செலுத்தி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.

கைது செய்யப்பட்ட உடன் மனநலப் பிரிவில் விசாரணைக் கைதியாக வைக்க ஆணையிடப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது.நியோ அய்க் சியாவ் என்ற 45 வயதான அவரது தற்போதைய மனநிலை குறித்து நீதிமன்றத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

சிங்கப்பூர் விமானப் படையின் பல்வேறு ஹெலிகாப்டர்களை நியோ இயக்கியுள்ளார்.விமானப் படையில் பணிபுரியும் நியோ இம்மாதம் 13-ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் மாணவர்கள் தங்கும் அறைக்குள் அத்துமீறி நுழைந்தது மட்டுமின்றி பெண்ணை மான பங்கப்படுத்தியுள்ளார்.மேலும்,எவ்வாறு அறைக்குள் நுழைந்தார் என்ற தகவல் வெளியாகவில்லை.

அறைக்குள் தங்கியிருந்த 21 வயதுப் பெண்ணின் தொடையை உரசி மானபங்கம் செய்ததாகவும் அவர் மீது புகாரளிக்கப்பட்ட்டது.மேலும், அவர் விமானப் படையின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதாக தற்காப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.

மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமானது எனவும்,அத்துமீறி அறைக்குள் நுழைவது கடும் கண்டனத்திற்குரியது எனவும் NTU நிர்வாகம் தெரிவித்துள்ளது.