“விண்வெளியிலும் சிங்கப்பூர் சாதனை” – உள்நாட்டு முதல் விண்வெளி கேமராவுடன் விண்ணில் செலுத்த தயாராகும் செயற்கைக்கோள்!

NTU

சிங்கப்பூர், விண்வெளியில் உள்ள புதிய எல்லை வரம்புகளைக் கண்டறிய ஒரு சிறிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் வரும் 2025ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி எந்த கட்டுப்பாடுகளும் இல்லை…எல்லைகளைத் திறக்க தயாராகும் மலேசியா – சிங்கப்பூரில் எப்போது?

மேலும், பூமிக்கு மேலே அதாவது 250 கிமீ தொலைவில் உள்ள பூமியின் மிகக் குறைந்த சுற்றுப்பாதையில் (VLEO) இந்த செயற்கைக்கோள் ஒரு வருடத்திற்கு மேல் செயல்படும்.

நேற்று பிப்ரவரி 9 அன்று நடந்த உலகளாவிய விண்வெளி மற்றும் தொழில்நுட்ப கூட்டத்தில் (GSTC) முன்னோடித் திட்டம் அறிவிக்கப்பட்டது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (NTU) தலைமையில் புதிய விண்வெளிக் கூட்டமைப்பை அதனுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குறைந்த சுற்றுப்பாதை செயற்கைக்கோள், பூமியின் மேற்பரப்பை தேவையான நேரத்தில் சிறப்பாக படம்பிடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இதன் கேமராவால் 0.5 மீ அளவுள்ள பொருளையும் அதிக தெளிவுத்திறன் கொண்ட படங்களாக எடுக்க முடியும்.

Bishan கார் பார்க்கில் 2 மீ உயரத்துக்கும் மேல் கொழுந்துவிட்டு எரிந்த மோட்டார் சைக்கிள்.. அருகில் நின்ற காரும் சேதம் (வீடியோ)