‘ஸ்டார்ட்- ஆப் வீக்கெண்ட் சிங்கப்பூர் 2021’: முதல் பரிசை தட்டிச் சென்ற என்.டி.யூ. பல்கலைக்கழக குழுவினர்!

 

 

 

சிங்கப்பூரில் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்று நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (Nanyang Technological University- ‘NTUsg’). இந்த பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான மானசா கோபால் மற்றும் அவரது குழுவினர் ‘ஸ்டார்ட்- ஆப் வீக்கெண்ட் சிங்கப்பூர் 2021’ (Start-up Weekend Singapore 2021) என்ற போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை தட்டிச் சென்றனர். அவர்களுக்கு பல்வேறு பல்கலைக்கழகத்தின் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

 

இவர்கள் உருவாக்கிய மொபைல் செயலி பயனர்கள் தங்கள் கார்பன் தடம் (Carbon Footprint) கணக்கீட்டு செய்வதை எளிதாக்கும். பயனர்களின் வங்கிப் பரிவர்த்தனைகள் எளிதாக இந்த செயலியில் இணைக்கலாம். கார்பன் வெளியேற்றம் (Carbon Emissions) குறித்து மிக ஆழமாக அறிந்துக் கொள்ளலாம்.