சிங்கப்பூரில் தொழிலாளர்களின் தேவைகளை புரிந்து கொள்ள NTUCயின் ஈடுபாடு பயிற்சி – மூன்று கட்டங்களாக நடைபெறும் !

New calls early screening cancers Singapore

சிங்கப்பூரில் குறைந்தபட்சம் 20,000 தொழிலாளர்களை சென்றடைவதை நோக்கமாகக் கொண்ட “#EveryWorkerMatters Conversations” என்ற பொது ஈடுபாடு பயிற்சியை தொழிலாளர்களின் தேவைகளை நன்கு புரிந்து கொள்வதற்காக ஆகஸ்ட் 11 அன்று தொடங்கியுள்ளது NTUC. மேலும் இந்த தொழிற்சங்கமானது  ஒரு வருட காலத்திற்கு அனைத்து விதமான தொழிலாளர்களையும் ஈடுபடுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

இதன் உரையாடல்கள், சொற்பொழிவுகள், குழு விவாதங்கள் மற்றும் ஆய்வுகளின் வடிவத்தில் இருக்கும். மேலும் இந்த உரையாடல்களில் பல்வேறு வாழ்க்கை நிலைகள் மற்றும் சமூக-பொருளாதார நிலைகளில் உள்ள சிங்கப்பூரர்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக NTUC கூறியுள்ளது.

மேலும் இந்த உரையாடல்கள் சிங்கப்பூரில் உள்ள தொழிலாளர்கள் மட்டுமின்றி, முதலாளிகள், அரசாங்கக் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கூட்டாளர் நிறுவனங்களையும் இந்த ஒரு வருடத்தில் ஈடுபடுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

மூன்று கட்டங்களாக நடைபெறும் உரையாடல்கள் :-

  1. முதல் கட்டமாக பொதுமக்களின் வேலை குறித்த அவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும்.
  2. இரண்டாம் கட்டமாக, முத்தரப்பு கூட்டாளர்கள், உயர்கல்வி நிறுவனங்கள், சமூக குடிமை அமைப்புகள், HR பயிற்சியாளர்கள் மற்றும் பிற கூட்டாளர் நிறுவனங்களோடு ஒன்று கூடி கொள்கைகளில் பரிந்துரைகளை மேற்கொள்ளும்.
  3. மூன்றாம் கட்டமாக, துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் ஜூன் மாதம் அறிவித்த ஃபார்வர்ட் சிங்கப்பூர் பயிற்சியின் மூலம் 4G தலைவர்கள் மற்றும் அரசாங்கக் கொள்கை வகுப்பாளர்களுடன் NTUC செயல்படும்.