சேவை செய்யிறதுக்காகவே பிறந்த செவிலியர்களின் பணிச்சுமையைக் குறைக்க திட்டம் – சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் செவிலியர்கள் மத்தியில் பேச்சு

Pic: Juan Monino vía Getty Images
சிங்கப்பூரில் கோவிட்-19 பெருந்தொற்று தீவிரமாகப் பரவிய போது மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை பெருகியது.

மருத்துவமனையில் நிரம்பி வழிந்த நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்கும் திறன் நாட்டின் சுகாதார ஊழியர்களுக்கு உள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் இ காங் தெரிவித்துள்ளார்.எனினும் செவிலியர்களின் வேலைச்சுமையைக் குறைப்பதற்கு செவிலியர் துறையில் உள்ள மனிதவளப் பிரச்சனயை எதிர்கொள்வது அவசியம் என்று அவர் கூறினார்.

நேற்று நடைபெற்ற சிங்ஹெல்த் குழுமத்தின் செவிலியர் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.சிங்கப்பூரின் செவிலியர் வட்டத்தில் சிங்கப்பூரர்கள்,அயல்நாட்டினர் எனப் பலதரப்பட்டோர் இருந்தனர்.சுமார் 400 செவிலியர்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

கூடியிருந்த செவிலியர்களை நோக்கி ” நீங்கள் இனியும் விடுமுறையில் செல்லலாம்,வேலைச்சுமை காரணமாக யாரும் அதிக சோர்வை உணரக்கூடாது என்பதை உறுதி செய்வதே மிக முக்கியம்.உங்கள் சேவையைத் தொடர்ந்து செய்வதற்கு நாங்கள் உறுதி செய்கிறோம்” என்று கூறினார்.

சிங்ஹெல்த் குழுமத்தில் 11,700-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணிபுரிகின்றனர்.ஆகஸ்ட் 1-ஆம் தேதி கொண்டாடப்படும் செவிலியர் தினத்தை முன்னிட்டு குழுமம் நேற்று அதன் செவிலியர் தினத்திற்கு ஏற்பாடு செய்தது.வாரந்தோறும் பணியிலிருந்து விலகும் செவிலியர்களின் விகிதத்தை கண்காணிப்பதாகவும் அமைச்சர் ஓங் தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.