மரண தண்டனையை எதிர்த்து பட்டமளிப்பு விழாவில் காகிதத்தை காட்டிய மாணவர் – பொது ஒழுங்கை மீறினாரா !

anti-death penalty

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தனது பட்டமளிப்பு விழாவின் போது மரண தண்டனைக்கு எதிரான செய்தியுடன் கூடிய காகிதத்தை காட்சிப்படுத்தியதாக கிடைத்த புகாரை சிங்கப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

25 வயதான லூக் லெவி என்ற மாணவர் தனது பட்டமளிப்பு விழா குறித்து ட்விட்டரில் தொடர் ட்வீட்களை ஜூலை 11 அன்று வெளியிட்டார். அவர் தனது பட்டமளிப்பு கவுன் பாக்கெட்டில் ஒரு காகிதத்தை கொண்டு வந்து, அதை விரித்து, மேடையில் நடந்து, மேடையில் பட்டப்படிப்பைப் பெற்றுக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து, காகிதத்துடன் மேடையை விட்டு வெளியேறினார். அந்த வெள்ளைத் தாளில் “மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்றும் வறுமையை ஒழியுங்கள், வாழ்க்கையை அல்ல” என்றும் கூறப்பட்டிருந்தது.

 

லெவி தனது ட்வீட்டில், மரண தண்டனை கைதியும்  சகமாணவருமான கல்வந்த் சிங், தூக்கிலிடப்படுவதற்கு முன்பு நீதிமன்றத்தில் தனது வாழ்க்கைக்காக கடைசி முறையீடு செய்தார். 31 வயதான மலேசியரான சிங், ஹெராயின் கடத்தியதற்காக ஜூன் 2016 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டு, ஜூலை 7 அன்று தூக்கிலிடப்பட்டார். தூக்கு தண்டனைக்கு ஒரு நாள் முன்னதாக, ஜூலை 6 அன்று, சிங்கப்பூரில் தனது மரணதண்டனையை நிறுத்தி வைக்க விண்ணப்பித்தார், ஆனால் அவரின் கடைசி நிமிட முயற்சி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் கூடும்  இடமென தெரிந்தே எந்தவொரு நபர், அரசாங்கத்தின் கருத்துக்கள் அல்லது செயல்களுக்கு ஆதரவாக அல்லது எதிராக ஒரு காரணத்தை விளம்பரப்படுத்துவதையோ அல்லது பிரச்சாரம் செய்வதையோ பொது ஒழுங்கு சட்டத்தை மீறுவதாகக் கருதலாம் என வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார். இருப்பினும், NUS என்பது ஒரு பொது இடமாக கருதப்படுமா என்பது விவாதத்திற்குரியது.