சிங்கப்பூரர்களே! கவலை எதுக்கு ? – பணவீக்கதைச் சமாளிக்க அரசு வழங்கும் ரொக்கத்தொகை

OCBC Bank is first in Singapore to enable use of SingPass
OCBC Bank is first in Singapore to enable use of SingPass (Photo: OCBC)

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைச் சமாளிக்க சுமார் 1.5 மில்லியன் தகுதியுள்ள சிங்கப்பூரர்களுக்கு இரண்டு உதவித்தொகை திட்டங்கள் மூலம் S$700 வரை ரொக்கத்தொகை பெறுவார்கள்.கடந்த ஜூன் மாதம் துணைப் பிரதமர் லாரன்ஸ் ஓங்க அறிவித்த S$1.5 பில்லியன் தொகுப்பின் ஒரு பகுதியான GSTV -cash மற்றும் மற்றொரு பகுதியான GSTV -சிறப்பு ரொக்கத் தொகைகள் மூலம் தகுதியான சிங்கப்பூரர்கள் இரண்டு ரொக்கத் தொகைகள் பெறுவார்கள்.

அரசாங்கத்தின் GST Voucher திட்டம் கூடுதல் சிறப்பு ரொக்கக் கட்டணத்துடன் விரிவுபடுத்தப் படுகிறது.இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 65 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய 5,75000 சிங்கப்பூர் குடிமக்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் அவர்களின் MediSave கணக்கில் S$450 வரை செலுத்தப்படும்.

பிறந்த ஆண்டின் அடிப்படையில் ரொக்கத் தொகை வழங்கப்படும்,ஜூலை 12 அன்று,குறைந்த வருமானம் கொண்ட நடுத்தர குடும்பத்தினர் மற்றும் முதியவர்கள் ,அவர்களின் GST செலவுகள் மற்றும் அடிப்படை வாழ்கைச் செலவினங்களை ஈடுசெய்ய ஆதரவளிக்கும் அரசாங்கத்தின் உதவியின் ஒரு பகுதியாக இந்த பணம் செலுத்தப்பட்டது.

அரசு வழங்கும் உதவித்தொகை திட்டங்களுக்கு முன்பு பதிவு செய்திருந்தால்,அவர்கள் தானாகவே தொகையைப் பெறுவார்கள்.இதற்கு முன் GSTV திட்டத்தில் பதிவு செய்யாதவர்கள் ஏப்ரல் 30,2023-க்கு முன்பு GSTV அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

GovCash பெறுநர்கள் தங்கள் PayNow அல்லது NETS QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் வணிகர்களுக்கு பணம் செலுத்த LifeSG பயன்பாட்டைப் பயன்படுத்தலாம்.