மோசடியில் பாதிக்கப்பட்ட 790 பேருக்கு S$13.7 மில்லியன் தொகையை தானே முன்வந்து செலுத்திய OCBC வங்கி

OCBC has made goodwill payouts
OCBC

OCBC வங்கி தொடர்பான SMS குறுஞ்செய்தி மோசடியில் பாதிக்கப்பட்ட 790 பேருக்கு S$13.7 மில்லியன் தொகையை OCBC வங்கி செலுத்தியுள்ளதாக நேற்று (ஜன. 30) அறிக்கையில் அறிவித்துள்ளது.

இந்த பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையானது, ஆரம்பத்தில் பதிவான S$8.5 மில்லியனை இழந்த 469 பாதிக்கப்பட்டவர்களின் புகார்களை விட அதிகமாகும்.

ஏனெனில், இவை அந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த போலீஸ் புகார்களின் அடிப்படையில் அமைந்தன.

சிங்கப்பூர் அடுக்குமாடி வீட்டில் தீ விபத்து: வெளிநாட்டு பணிப்பெண் உயிரிழந்த சோகம்!

அதனை அடுத்து, இந்த ஆண்டு ஜனவரி தொடக்கத்திற்குப் பிறகு அதிக போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டு வங்கியில் சமர்ப்பிக்கப்பட்டன.

கடந்த வார இறுதிக்குள் SMS மோசடிகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழு நல்லெண்ணம் அடிப்படையில் பணம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் என்று OCBC முன்னதாக ஜனவரி 19 அன்று அறிவித்தது.

அதன் பின்னர் நேற்றைய (ஜனவரி 30) அறிக்கையில், இந்த பணம் வழங்கும் ஏற்பாடுகள் முடிந்துவிட்டதாக வங்கி தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த தமிழக ஊழியர் திடீர் இறப்பு