அக்.14- ஆம் தேதி சிங்கப்பூரில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி!

Photo: Yuvan Shankar Raja Official Twitter Page

சிங்கப்பூரைச் சேர்ந்த மேஸ்ட்ரோ புரொடக்சன்ஸ் நிறுவனம் (Maestro Productions Pte Ltd) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் அக்டோபர் 14- ஆம் தேதி அன்று மாலை 06.00 மணிக்கு சிங்கப்பூரில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் (Singapore Indoor Stadium) பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

“சென்னை- சிங்கப்பூர் இடையே கூடுதல் விமான சேவை”- இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

இதற்கான டிக்கெட் முன்பதிவு ஏப்ரல் 14- ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை 75 வெள்ளி முதல் 450 வெள்ளி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது”. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, சிங்கப்பூரில் முதன்முறையாக இசை நிகழ்ச்சியைப் படைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் புத்தாண்டையொட்டி, லிட்டில் இந்தியாவில் பொருள்களை வாங்க குவிந்த மக்கள்!

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மேஸ்ட்ரோ புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.