அக்.16- ஆம் தேதி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் மிகவும் பிரசித்திப் பெற்றது ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இந்த கோயில் சவுத் பிரிட்ஜ் சாலையில் (South Bridge Road) அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீமிதி திருவிழா (Firewalking Festival 2022), நடப்பாண்டில் வரும் அக்டோபர் 16- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. எனவே, வார இறுதி நாட்களிலும், தீமிதி நாளிலும் தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்ற விரும்பும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.

தொடர்ந்து கோடிக்கணக்கில் பிடிபடும் கடத்தல் தங்கம் – என்னதான் நடக்குது?

நேரடி முன்பதிவு கிடையாது. கோயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று பதிவு செய்துக் கொள்ளலாம். வரும் அக்டோபர் 16- ஆம் தேதி அன்று நடைபெறும் தீமிதி திருவிழாவில் தீமிதியில் பங்கேற்பதற்காக பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான பதிவு வரும் அக்டோபர் 15- ஆம் தேதி சனிக்கிழமை இரவு 09.00 மணியுடன் நிறைவடைகிறது. தீமிதி மற்றும் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய https://heb.org.sg/fw2022/ என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று பதிவு செய்துக் கொள்ளலாம்.

சிங்கப்பூரில் அக்டோபர் 14 முதல் சிறப்புவாய்ந்த bivalent தடுப்பூசி!

வரும் அக்டோபர் 14- ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் அக்டோபர் 17- ஆம் தேதி திங்கள்கிழமை வரை ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் (Hindu Endowments Board) அதிகாரப்பூர்வ யூ-டியூப், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.