சிங்கப்பூரில் வயதான பெண்மணி கீழே விழுந்து படுகாயம்; இறுதி வரை உடன் இருந்து உதவிய ஊழியர்கள்…!!

Old lady injured

சிங்கப்பூர் Toa Payoh பகுதியில் ஒரு வயதான பெண்மணி (81) படிக்கட்டில் ஏறிச் செல்லும்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார்.

அதில் அவர் கன்னத்தில் ஆழமான காயம் ஏற்பட்டது. இந்த காயத்தின் காரணமாக இரத்தம் அதிகமாக வெளியானது. அந்த வழியாக வந்த இரண்டு இந்தியர்கள் காயத்தில் இருக்கும் இந்த வயதான பெண்மணியை கண்டனர், ரத்தத்தை நிறுத்துவதற்காக அந்த பெண்மணிக்கு டிஷ்யூ பேப்பர்களை வழங்கினர்.

அந்தப் பெண்மணியிடம் கைபேசி இல்லாத காரணத்தினால் அவர் உறவினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. கடுமையான வலி மற்றும் ரத்தப் போக்கு அதிகம் இருந்ததால் வாகனத்தை பிடித்து டான் டோக் செங் மருத்துவமனைக்கு செல்ல முடிவெடுத்தார் அவர்.

HDB Hub-ல் NTUC Fairprice-க்கு வெளியே அந்த பெண்மணி கடந்து செல்லும்போது, ஊழியர்கள் அவரது இரத்தக் கறை படிந்த நிலையைக் கண்டு, அதன் பிறகு உதவி தேவையா? என்று கேட்க விரைந்தனர்.

பின்னர், அவர்கள் அவரை அலுவலகத்திற்கு அழைத்து வந்து, முதலுதவி அளித்து சுத்தம் செய்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, வெட்டு மிகவும் ஆழமாக இருந்ததால் இரத்தப்போக்கு நிற்கவில்லை.

அடுத்ததாக, அவர்கள் அவருக்காக ஆம்புலன்ஸ் அழைக்க வேண்டுமா? என்று கேட்டார்கள், அதற்கு பெண்மணி மறுத்துவிட்டார்.

இதனை அடுத்து தையல் போட அருகிலுள்ள கிளினிக்கிற்குச அழைத்துச் செல்ல திட்டமிட்டனர். ஆனால், ஞாயிற்றுக்கிழமை என்பதால் எந்த கிளினிக் திறக்கப்படும் என்று அந்தப் பெண்மணிக்கு தெரியவில்லை.

பின்னர் ஊழியர்கள் டோவா பயோ சென்ட்ரலில் அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றை கண்டுபிடித்தனர். அதனால் தான் டி.டி.எஸ்-க்குச் செல்வதற்குப் பதிலாக, குறுகிய காலத்திற்குள் இந்த காயத்திற்கு தையல் போட முடிந்தது.

இந்நிலையில் Sim Cher Guan தனது முகநூல் பக்கத்தில், அதிர்ஷ்டமான ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் என் அம்மாவுக்கு உதவியதற்காக Fairprice NTUC (500, Lorong 6 #B1-32/#01-33) ஊழியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைப் பதிவு செய்ய விரும்புகிறேன், என்று பதிவிட்டு நன்றியை தெரிவித்திருந்தார்.

இவர்களின் செயலை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.