“ஓமிக்ரான் அலை நெருங்கிவிட்டது, அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்” – அமைச்சர் ஓங்

Singapore record highest-imported-cases
Andrew Koay via Mothership

சிங்கப்பூரில் கோவிட்-19 சூழல் குறித்த அறிவிப்பை சுகாதார அமைச்சர் ஓங் யீ குங் இன்று (ஜன. 3) தெரிவித்தார்.

அப்போது, கோவிட்-19 சூழல் இதுவரை நிலையாக உள்ளது என்றாலும், இங்கு அதிகரித்து வரும் ஓமிக்ரான் பாதிப்புகளின் எண்ணிக்கை “ஓமிக்ரான் அலை” நெருங்குவதை குறிப்பதாக அவர் கூறினார்.

இனி வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே விமான சேவை – இந்திய மாநிலம் அதிரடி உத்தரவு

தற்போது உள்ளூர் பதிப்புகளில் 17 சதவீத பேர் ஓமிக்ரான் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஓங் கூறினார்.

இதன் பொருள், “ஓமிக்ரான் அலை நெருங்கிவிட்டது” என்றும், அதற்கு “நாம் தயாராக இருக்க வேண்டும்” என்றும் அவர் எச்சரித்தார்.

இருப்பினும், சிங்கப்பூரின் கோவிட்-19 சூழல் இதுவரை நிலையானதாகத் தொடர்கிறது என்றும் ஓங் கூறினார்.

அடுக்குமாடி குடியிருப்பில் அசைவற்று கிடந்த ஆறு மாத குழந்தை இறப்பு