Rolls Royce உட்பட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் காலிப்பணியிடங்களை நிரப்ப நேர்காணல் – உடனடியாக பணியமர்த்த One Aviation Careers வேலைவாய்ப்பு முகாம்

one aviation careers singapore logistics job fair

சிங்கப்பூர் விமான போக்குவரத்து துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு வெள்ளிக்கிழமையன்று (May 27) நடத்தப்பட்ட One Aviation Careers வேலைவாய்ப்பு கண்காட்சியில் வேலை தேடுபவர்கள் குவிந்தனர்.கண்காட்சியில் பங்கேற்கும் நிறுவனங்களுடன் நேர்காணல்களை பெறுவதற்காக சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்தனர்.

இரண்டு நாள் கண்காட்சியில் முதல் நாள் நிகழ்வில் 6000-க்கும் அதிகமானோர் பங்கேற்றதாக சிங்கப்பூர் விமான போக்குவரத்து ஆணையம் (CAAS) தெரிவித்தது.

Covid-19 வைரஸ் தொற்றினால் இரண்டு ஆண்டுகளுக்கு மந்தமாக தோன்றிய நிலையில் தற்பொழுது விரைவாக மீண்டு வருவதாக சிங்கப்பூர் விமான போக்குவரத்து துறையை பற்றி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
20-க்கும் மேற்பட்ட விமான பணியாளர்கள் 2000 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேலை தேடுபவர்களை நேரில் நேர்காணல் செய்தனர்.

லாஜிஸ்டிக்ஸ், ஏர்லைன்ஸ்,விண்வெளி நிறுவனங்கள் மற்றும் ஏவியேஷன் சப்போர்ட் சர்வீசஸ் போன்றவற்றில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு கண்காட்சியில் நிறுவனங்களால் அமைக்கப்பட்டிருந்த சாவடிகளில் நேர்காணலுக்கு பதிவுசெய்ய மக்கள் கூட்டமாக காத்திருந்தனர்.

சிங்கப்பூரின் விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலா துறையை மீண்டும் மீட்டெடுப்பதற்கு மனிதவளம் தேவை என்று போக்குவரத்து மூத்த அமைச்சர் Chee Hong கூறினார். விமான போக்குவரத்து துறையின் எதிர்காலத் திட்டங்களை பகிர்ந்து கொள்ளவும் ,நம்பிக்கையை அதிகரிக்கவும் இந்த கண்காட்சி உதவுவதாக குறிப்பிட்டார்.

dnata, FedEx, Rolls-Royce, Pratt & Whitney, Certis Group, Lotte Travel Retail சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் ஏரோ சப்போர்ட் சர்வீசஸ் ஆகியவை கண்காட்சியில் பங்கேற்ற மற்ற நிறுவனங்களில் அடங்கும்.சாங்கி விமான நிலையம் மற்றும் அதற்கு அருகில் உள்ள தொழில்கள் Covid-19 தொற்றுகு முந்தைய காலத்தில் 200,000 வேலை வாய்ப்புகளை வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்