மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் One Love Asia இசைத்திருவிழா – விரைவில் முன்பதிவு தொடக்கம் !

One Love Asia

டிசம்பரில் நடக்கவிருக்கும் Jay Chouவின் இசை நிகழ்ச்சிக்கு முன், ஒன் லவ் ஏசியா (One Love Asia) ஃபெஸ்டிவல் 2022 அக்டோபர் 22 மற்றும் 23களில் நடைபெறவிருக்கிறது.

IMC Live Globalஆல் ஏற்பாடு செய்யப்பட்ட, Bayfront Event Space இல் நடக்கும் இந்த இரண்டு நாள் நிகழ்வானது Stefanie Sun, Namewee, Show Luo, Tanya Chua, WeiBird, F.I.R., Yoga Lin மற்றும் Oaeen போன்ற பெரிய கலைஞர்களை கொண்டுள்ளது. இது முதலில் மே 2020 இல் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கோவிட் -19 பெருந்தொற்று  காரணமாக திருவிழா ஒத்திவைக்கப்பட்டது.

இந்த விழாவின் ஒவ்வொரு நிகழ்வும் 40 நிமிடங்களுக்கு சிறந்த இசைக்குழுவுடன்  நிகழ்த்தப்படும் என IMC Live Global தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் கோவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் ஒவ்வொரு நாளும் 10,000க்கும் அதிகமானோர் கூடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிங்கப்பூரில் நடைபெறும் பெரிய அளவிலான திருவிழாக்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என கூறியுள்ளனர். மேலும் பார்வையாளர்கள் இரண்டு நாட்களும் வந்து  முழு அனுபவத்தை பெறுமாறு கேட்டுக் கொள்ளபட்டுள்ளனர்.

ஜூலை 25, 2022 காலை 11 மணி முதல் SISTIC மற்றும் All Access Asia வழியாக டிக்கெட்டுகள் கிடைக்கும்:

நிகழ்ச்சி – தேதி மற்றும் நேரம்: அக்டோபர் 22-23, 2022, மாலை 4 மணி முதல்

நிகழ்ச்சி – இடம்                                : Bayfront Event Space

மேலும் இது பற்றிய விவரங்கள் One Love Asiaவின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும்.