புற்றுநோயாளிகளுக்கு ஆதரவளிக்கும் சிங்கப்பூர் அரசு – சுகாதார அமைச்சர் ஒங் யி காங்கின் விளக்கம்!

Singapore may consider replacing 14-day isolation for travellers with 'rigorous testing': Ong Ye Kung
(Photo: Ong Ye Kung's Facebook page)

சிங்கப்பூரில் புற்றுநோய் மருந்துப் பட்டியலில் இல்லாத மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகள் ‘Medisheild Life’ திட்டத்தின் கீழ் பலனடைய முடியாத நிலையில்,இம்மாதம் முதல் தங்களின் சிகிச்சைக்காக அரசாங்கத்திடமிருந்து உதவி பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது புற்றுநோய் சிகிச்சையை ஆகஸ்ட் 31ஆம் தேதி அல்லது அதற்குமுன் தொடங்கிய நோயாளிகளுக்கு அரசு ஆதரவு அளிக்கும் என்று சுகாதார அமைச்சர் ஒங் யி காங் தெரிவித்தள்ளார்.

சிங்கப்பூர் புற்றுநோய் சங்கத்தின் நேற்றைய விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்,”புற்றுநோய் மருந்துகளின் விலை திடீரென உயர்ந்துவிட்டதாக நோயாளிகள் எண்ணும் சூழலை தவிர்க்க வேண்டும்.

அதன் தாக்கத்தை அவர்கள் உணராதவாறு சில நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.புற்றுநோய் காப்பீட்டுத் திட்டத்தில் சிங்கப்பூர் சில மாற்றங்களைச் செய்துள்ளது.

காப்பீடு கோருவதற்கான மருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பினும் நோயாளிகளுக்கு உதவுவதற்கான நிதி,வருடத்திற்கு $12 மில்லியனிலிருந்து $80 மில்லியன் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Medishield Life திட்டத்தின் கீழ் புற்றுநோய் காப்பீடு மூலம் பெறக்கூடிய தொகை இனி மாதம் $200 முதல் $9,600 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.