சிங்கப்பூரில் உள்ள செவிலியர்களை வேலைகளில் தக்கவைத்துக்கொள்ள 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஊதிய உயர்வு – சுகாதார அமைச்சர் ஒங் !

Ong Ye Kung

சிங்கப்பூரில் உள்ள செவிலியர்கள் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கூடுதல் ஊதியங்களைப் பெறுவார்கள் என்றும் இது செவிலியர்களைத் தொழிலில் வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யே குங் கூறியுள்ளார்.

2022 ஹெல்த்கேர் ஸ்காலர்ஷிப் விருது வழங்கும் விழாவில் பேசிய ஓங், செவிலியர் தொழிலின் கவர்ச்சியை நிர்ணயிக்கும் இரண்டு முக்கிய காரணிகளில் ஊதியம் ஒன்று என்று குறிப்பிட்டார். 2021 ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சகம் (MOH) செவிலியர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார நிபுணர்களின் சம்பளத்தை மதிப்பாய்வு செய்த நிலையில்  செவிலியர்களின் இழப்பீட்டுக்கான இரண்டாம் கட்ட சரிசெய்தலை இந்த மாதம் (ஜூலை 2022) முடித்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் கோவிட்-19 தொற்றுநோய் இன்னும் தொடரும் நிலையில் அதை நிர்வகிப்பதற்கான பெரும் சுமை செவிலியர்கள் மீது விழுகிறது என்றும் இதனால் அவர்கள் ஊதிய உயர்வுக்கு தகுதியானவர்கள் என்று தான் நினைப்பதாகவும் ஓங் கூறியுள்ளார்.

2022 மற்றும் 2023 க்கான மேம்படுத்தப்பட்ட ஊதிய தொகுப்பை MOH திட்டமிடும் என்றும் அது  குறித்த விவரம், ஆகஸ்ட 1 – செவிலியர் தினத்தன்று அறிவிக்கப்படும் என்றும் ஓங் கூறியுள்ளார்.