“அது போல் இது இல்லை ” – சிங்கப்பூரில் குரங்கம்மை பாதிப்புகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

monkeypox

Covid-19 வைரஸ் தொற்றை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் குரங்கம்மை மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை சிங்கப்பூரில் குரங்கம்மை பாதிப்புகள் கண்டறியப்படவில்லை. சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் Ong Ye Kung “எதிர்வரும் வாரங்களில் சிங்கப்பூரில் குரங்கம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ” என்று தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

உலகில் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கம்மை பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதுவரை 200 குரங்கம்மை வழக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் கலந்துகொண்ட உலக சுகாதார மாநாட்டில் இது கவனத்தை ஈர்த்து உள்ளதாகவும் கூறினார்.

Covid-19 தொற்றை போலல்லாமல் நெருங்கிய உடல் தொடர்பு கொண்டால் மட்டுமே குரங்கம்மை பரவும் வாய்ப்புள்ளது என்று கூறிய அவர் அதுபோல் இது காற்றில் பரவாது என்றும் குறிப்பிட்டார்.

தோல் பகுதியில் தடிப்பு அல்லது கட்டிகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்

இது ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் சில விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் தாவி வந்த வைரஸ் என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூர் மக்கள் உலக நாடுகளுக்கு பரவலாகப் பயணம் செய்வதாகவும் அமைச்சர் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.