சிங்கப்பூரில் கடை ஒன்றுக்கு வெளியே ஒன்றுகூடிய பொதுமக்கள்.. அதிகாரிகள் விசாரணை!

Orchard Gateway Foot Locker Investigate
Investigations under way after crowds gather outside Foot Locker

ஆர்ச்சர்ட் கேட்வேயில் உள்ள ஃபுட் லாக்கர் (Foot Locker) கடைக்கு வெளியே நேற்று இரவு மக்கள் ஒன்று திரண்டதை அடுத்து, விசாரணைகள் நடந்து வருவதாக சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (STB) இன்று தெரிவித்துள்ளது.

விளையாட்டு காலணி மற்றும் துணி கடைக்கு வெளியே கூடியிருந்த பெரிய கூட்டத்தின் புகைப்படங்கள் ஆன்லைனில் பகிரப்பட்டன.

இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்த 3 பேருக்கு தொற்று பாதிப்பு!

புகைப்படங்கள்

மேலும், COVID-19 பாதுகாப்பான இடைவெளி விதிகளை மீறியதாகவும் அந்த புகைப்படங்கள் பகிரப்பட்டதை அடுத்து இந்த அறிக்கை வந்துள்ளது.

அந்த பகிரப்பட்ட புகைப்படங்களில் காவல்துறை வாகனங்களும் காணப்பட்டன.

காவல்துறை

இரவு 8.30 மணியளவில் பாதுகாப்பு இடைவெளி தொடர்பான அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்த பின்னர் கூட்டம் கலைந்து சென்றதாக STB தெரிவித்துள்ளது.

ஃபுட் லாக்கர் கடையில், கூட்டம் கூடுவதை பற்றி பலமுறை எச்சரிக்கை ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தொடர்ந்து அதிகமான கூட்டங்களை ஈர்க்கும் நிகழ்வுகளை நடத்தி வருவதால் விசாரணைகள் நடந்து வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.

(Photo: Twitter/Papalovel)

பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளில் எந்தவொரு மீறலும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும், மேலும் தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்காது என்றும் அது மேலும் கூறியுள்ளது.

சட்டம்

COVID-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ், முதல் முறை குற்றவாளிகளுக்கு S$10,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு S$20,000 வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் மேலும் இரண்டு வேலையிட மரணங்கள்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…