மின்தூக்கியின் அடியில் சிக்கிக் கொண்டவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

Photo: Singapore Civil Defence Force

 

நேற்று (17/07/2021) மாலை 04.20 PM மணியளவில் சிங்கப்பூரில் உள்ள 290 ஆர்ச்சர்ட் சாலையில் (No. 290 Orchard Road) உள்ள ‘Paragon’ ஷாப்பிங் சென்டரில் தொழில்நுட்ப வல்லுநர் மின்தூக்கியின் அடியில் சிக்கிக் கொண்டதாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினருக்கு (Singapore Civil Defence Force- ‘SCDF’) தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

 

அத்துடன், சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் அவசர மருத்துவக் சேவைகள் குழுவினர் மற்றும் மத்திய தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களும் (Firefighters from Central Fire Station) சம்பவ இடத்திற்கு சென்றனர்.

 

பின்னர், மின்தூக்கியின் அடியில் (Lift Technician) சிக்கிக் கொண்ட தொழில்நுட்ப வல்லுநரை ஏணியின் உதவியுடன் உள்ளே சென்று பத்திரமாக மீட்டனர். அதனை தொடர்ந்து, அவசர மருத்துவக் சேவைகள் குழுவினர், அவரை பரிசோதித்ததில் அவருக்கு உடலின் வலது பக்கத்தில் காயம் ஏற்பட்டது தெரிய வந்தது.

 

இதையடுத்து, அவர் ஆம்புலன்ஸ் மூலம் டான் டொக் செங் (Tan Tock Seng Hospital) மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றன.