ஆர்ச்சர்ட் சாலையில் அடிதடி சண்டை – கலவரம் செய்ததாக 3 பேர் மீது குற்றச்சாட்டு

orchard-towers-rioting-fight

ஆர்ச்சர்ட் சாலையில் அடிதடி சண்டையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 3 ஆடவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சண்டை குறித்து நேற்று முன்தினம் (ஆக. 14) அதிகாலை 5.15 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது

சிங்கப்பூரில் உள்ள ஜப்பானிய உணவகத்தில் வேலை! – மனிதவளத்தை மேம்படுத்த புதிய திட்டம்

சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்கு முன்பே சண்டையில் சம்மந்தப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டதாக சிங்கப்பூர் காவல் படை (SPF) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

போலீஸ் கேமராக்கள் மற்றும் க்ளோஸ் சர்க்யூட் கேமரா உதவியுடன் சண்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று நபர்களின் அடையாளங்களை அதிகாரிகள் கண்டறிந்தனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 20 மற்றும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், அவர்கள் மீது கலவரம் செய்ததாக இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படலாம்.

சண்டையின் போது தாக்கப்பட்டதாக நம்பப்படும் 20 மற்றும் 30 வயதுடைய இருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தொடர்வதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Video : https://www.facebook.com/100009230834010/videos/518217146729335/

தானே தொலைந்து தானே வெளிவந்த சிங்கப்பூரர் – மலேசியாவின் காட்டுக்குள் சென்றவர் 12 மணிநேரத்திற்கு பின்னர் திரும்பினார்