சிங்கப்பூரை நோக்கி பயணிக்கும் ஜப்பான் பிரதமர் – இஸ்தானாவில் அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா

japan pm fumio kishida visit to singapore met with halima lee istana

ஜப்பான் பிரதமர் Fumio Kishida வெள்ளிக்கிழமை அன்று (June 10) சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ வருகையின்போது ஜனாதிபதி ஹலிமா மற்றும் பிரதமர் லீ ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். ஜப்பானின் பிரதமராக கடந்த ஆண்டு பதவி ஏற்ற கிஷிடா , சிங்கப்பூருக்கு வருகை புரியுமாறு பிரதமர் லீ அவர்களால் அழைக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் (MFA) தெரிவித்தது.

ஜப்பானிய பிரதமரின் இந்த வருகை சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையேயான நல்லுறவை அடிக்கோடிட்டு காட்டுகிறது. மேலும் கடந்து 2021 ஆம் ஆண்டில் ராஜதந்திர உறவுகளின் 55ஆவது நிறைவை கட்டி எழுப்புவதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

ஜப்பானிய பிரதமரை வரவேற்பதற்காக இஸ்தானாவில் அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் கிஷிடா சனிக்கிழமை அன்று நடைபெறும் அதிகாரப்பூர்வ வரவேற்பு விழாவில் கலந்து கொள்வார். மேலும் ஜனாதிபதி ஹலீமா மற்றும் பிரதமர் லீ உடன் இணைந்து மதிய உணவை பகிர்ந்து கொள்வார்.

ஜப்பானிய பிரதமரின் சிங்கப்பூர் வருகையின் நினைவாக புதிய வகை கலப்பின Orchid செடிகளுக்கு அவரது பெயரை வைத்து கௌரவிக்க உள்ளதாக சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள் பங்கேற்கும் இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும். வெள்ளிக்கிழமை பிரதமர் கிஷிடா முக்கிய உரையாற்றுவார் என்று தகவல்கள் கூறுகின்றன