வீடுகளில் வளர்க்கும் விலையுயர்ந்த மீன்கள்தான் ருசியா இருக்கு! – சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் தென்படும் நீர்நாய்கள்

சிங்கப்பூரின் குடியிருப்பு பகுதியில் நீர்நாய்களின் தொந்தரவு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.நீர்நாய்கள் அவற்றிற்கு தேவையான வேட்டையாடும் பொருட்டு வீட்டிற்குள் நுழைந்து அங்குள்ள வளர்ப்பு மீன்களை உண்டு வருகின்றன.

குடியிருப்பு வாசிகளின் புகார்களைத் தொடர்ந்து தற்போது அவை புதிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.நீர்நாய்களுக்கு ஏற்ற உணவு அவற்றின் இருப்பிடத்தில் கிடைக்காத காரணத்தால் அவை குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வருகிறது.

எனவே,தற்போது நீர்நாய்களுக்கு ஏற்ற இயற்கை உணவான மீன்கள் எளிதாக கிடைக்ககூடிய வகையில் புதிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேசிய பூங்காக்கழகம் தெரிவித்தது.

குடியிருப்புவாசிகள் அவர்களது வீட்டுக்குள் ஆசையாக வாங்கி வளர்த்து வரும் விலையுயர்ந்த மீன்களையும் நீர்நாய்கள் தின்றுவிடுவதால் அவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.எனவே,பூங்காக் கழகம் நீர்நாய்களைக் கண்காணித்து வருகிறது.நீர்நாய்கள் பொதுவாக நீர்நிலையங்களில் வசித்து வந்தாலும் அண்மைக்காலமாக அவை வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன.

otters

சிங்கப்பூரில் நீர்நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பொதுமக்களின் கண்களில் அடிக்கடி தென்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.நீர்நாய்களைச் சமாளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியத் ஹவ் முகநூலில் பதிவிட்டார்.