போலி ஆடம்பரமான பொருட்கள் விற்பனை – சந்தேகத்தில் ஆடவர் கைது

Singapore Police Force

போலி ஆடம்பரமான பொருட்களை விற்பனை செய்து மோசடி செய்த சந்தேகத்தில் 29 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் திங்கள்கிழமை (டிச. 13) தெரிவித்தனர்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று, கரோசெல்லில் ஆன்லைன் விற்பனையாளர் ஒருவர் மூலம் போலி ஆடம்பரப் பை வாங்கும்போது பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து காவல்துறைக்கு புகார் கிடைத்தது.

அந்த ஆன்லைன் விற்பனையாளரின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் பணிபுரியும் பாதுகாப்புக் காவலருக்கு சிறை

இந்த பரிமாற்றத்தின் போது சொகுசு பை உண்மையானது என்று விற்பனையாளர் கூறியதாக காவல்துறை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

கூடுதலாக, இதே விற்பனையாளர் மற்றொரு கரோசல் கணக்கை போலியான ஆடம்பர பொருட்களை விற்பனை செய்ய பயன்படுத்தியதாக கடந்த டிசம்பர் 9 அன்று பாதிக்கப்பட்டவரிடமிருந்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

உட்லண்ட்ஸ் காவல் பிரிவு அதிகாரிகள் டிச.,12ஆம் தேதி மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், அந்த ஆடவரை கைது செய்தனர்.

சோதனையின் போது, ​​பைகள், காலணிகள் மற்றும் நகைகள் உள்ளிட்ட போலி ஆடம்பரப் பொருட்களையும், S$4,050 மதிப்பிலான பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் இதே போன்ற வழக்குகளில் தொடர்புடையவர் என நம்பப்படுகிறது.

இனி கட்டாய PCR சோதனை, ஏழு நாள் தனிமை இல்லை: 14 நாள் உடல்நிலையை கண்காணிக்க வேண்டும்