பான் தீவு விரைவுச் சாலையில் விபத்து- ஏழு மாத குழந்தை உள்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி!

File Photo: Wikipedia

 

நேற்று (17/07/2021) மதியம் 12.50 PM மணியளவில் சிங்கப்பூரில் உள்ள பான் தீவு விரைவுச் சாலையில் (Pan-Island Expressway- ‘PIE’) துவாஸை நோக்கிச் செல்லும் பாதையில் போக்குவரத்து விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 5 கார்களும், ஒரு லாரியும் சம்பந்தப்பட்டிருக்கிறது.

 

விபத்தில் ஏழு மாத குழந்தை மற்றும் 25 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து, ஆண்கள் இருவருவம் ஆம்புலன்ஸ் மூலம் டான் டொக் செங் (Tan Tock Seng) மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றன. அதேபோல், ஏழு மாத குழந்தை கேகே பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் (KK Women’s and Children’s Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அனைவரும் சுயநினைவுடன் இருக்கின்றனர். இவ்வாறு சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை படையினர், காவல்துறை அதிகாரிகள் (Singapore Civil Defence Force, Police) தெரிவித்துள்ளனர்.

 

மேலும், இந்த விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்த காவல்துறை அதிகாரிகள், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

 

அதன் தொடர்ச்சியாக, விபத்து நடந்த சாலையில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.