“சிங்கப்பூரின் பாதுகாப்பு, நிலைத்தன்மை, வெற்றிக்கான மிகப்பெரிய பொறுப்பை PAP கட்சி தொடர்ந்து சுமந்து வருகிறது” – பிரதமர் லீ

GE2020: PM Lee visit Polling station (Photo: PAP)

சிங்கப்பூரை முன்னோக்கி கொண்டு செல்ல மக்கள் செயல் கட்சி (PAP) எப்போதும் சிங்கப்பூரர்களுடன் நெருக்கமாக பணியாற்றும் என்று பிரதமர் லீ சியன் லூங் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 14) கூறினார்.

கட்சியின் பணி எதிர்காலத்தை முன்னறிவிப்பதல்ல, அதை உருவாக்குவதே என்றார் அவர்.

Omicron கிருமியை எதிர்கொள்ள தயாராகும் சிங்கப்பூர்: “பூஸ்டர்” தடுப்பூசி முக்கிய பகுதியாக இருக்கும் – பிரதமர் லீ

மேலும், சிங்கப்பூரின் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் வெற்றிக்கான பாரிய பொறுப்பை PAP கட்சி தொடர்ந்து சுமந்து வருவதாகவும் அவர் கூறினார்.

டாக்டர் சாஷி ஜெயக்குமாரின், A History of the People’s Action Party: 1985-2021 புத்தக வெளியீட்டு விழாவில் திரு லீ பேசினார்.

அப்போது, 1985ஆம் ஆண்டு “அரசியல் வளர்ச்சியில் ஒரு திருப்புமுனை” என்று திரு லீ கூறினார்.

“1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு முக்கிய பொதுத் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில், PAP கட்சியின் பழைய காவலர்கள் பலர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றனர் அல்லது தலைமைப் பொறுப்புகளில் இருந்து விலகினர்.”

அதன் புதிய அமைச்சரவையில், திரு லீ குவான் யூ, திரு எஸ் ராஜரத்தினம் மற்றும் திரு எட்மண்ட் W பார்கர் ஆகியோர் மட்டுமே PAPஇன் தலைமுறை அமைப்பில் இருந்தனர், என்றார்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் பணிபுரியும் பாதுகாப்புக் காவலருக்கு சிறை